நான் கேப்டன் விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்கியிருப்பேன்.. ஜஸ்ட் மிஸ்.. பில்டப் கொடுத்த மன்சூர் அலிகான்..

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2021, 1:01 PM IST
Highlights

ஆனால் விஜயகாந்த் இயக்குனர் ஆர்கே செல்வமணி, நடிகர் சரத்குமார், பாக்கியராஜ், நடிகை ரோஜா மற்றும் நடனக் கலைஞர்கள், சண்டை காட்சி நிபுணர்களை உருவாக்கியவர். விஜயகாந்த் திரைப்படத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துடன் தான் இருந்திருந்தால்  இந்நேரத்திற்கு அவர் முதலமைச்சராகியிருப்பார் எனவும், அவருடன் இணைந்து பணிக்கு முடியாதது வருத்தம் அளிக்கிறது எனவும், நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின், 69வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது கட்சித் தொண்டர்கள் அவரது பிறந்தநாளை, எளிமையாகவும், அதேநேரத்தில் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்த் கொண்டாடி வரும் சூழலில், கொரோனா அச்சம் காரணமாக தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்குமாறு அவர் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்நிலையில் நடிகரும் தமிழ் புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூரலிகான் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதனையடுத்து செய்தியாளரை சந்தித்து அவர் கூறியதாவது, விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு நடிகர்களுக்கு வாழ்க்கை அளித்தவர், அவர் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே ராஜாபாதர் தெருவில் உள்ள தனது வீட்டில் பல உதவி இயக்குனர்களுக்கு உணவு அளித்தவர். பல திரைக் கலைஞர்களை உருவாக்கியவர். நடிகர்கள் பொதுவாக நடிகைகளை மட்டும்தான் அறிமுகம் செய்வார்கள். ஆனால் விஜயகாந்த் இயக்குனர் ஆர்கே செல்வமணி, நடிகர் சரத்குமார், பாக்கியராஜ், நடிகை ரோஜா மற்றும் நடனக் கலைஞர்கள், சண்டை காட்சி நிபுணர்களை உருவாக்கியவர்.

விஜயகாந்த் திரைப்படத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவருடன் அரசியலில் இணைந்து பயணிக்க முடியாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் அவரை சந்தித்தேன். என்னை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர் அரசியல் தொடங்கி பயணித்து வரும் நிலையில், இந்நேரத்திற்கு அவர் முதலமைச்சராகி இருக்க வேண்டும். அவருடன் மன்சூர் அலிகான், வசனகர்த்தா லியாகத் அலிகான் என இரண்டு கண்கள் அவருடன் இருந்திருந்தால், இந்நேரத்துக்கு அவர் முதலமைச்சராக இருப்பார். கொரோனா என்பது இல்லவே இல்லை, அதை வைத்து ஏமாற்றுகிறார்கள். கொடநாடு கொலை வழக்கில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் இவ்வாறு மன்சூர் அலிகான் பேசினார். 
 

click me!