மேலும் 14 பேரின் வீடியோ.. ராகவனுடன் இருக்கும் பெண் இவர்தான்.. அடையாளம் தெரிந்தது.. விசாரணை துவங்குகிறது.

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2021, 12:34 PM IST
Highlights

இந்நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க பாஜக மாநில செயலாளர் மலர்கொடி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

கே.டி ராகவன் இடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், சம்பந்தப்பட்ட பெண் யாரென்று அடையாளம் தெரிந்துள்ளது என்றும் பாஜக மாநில செயலாளர் மலர்க்கொடி தெரிவித்துள்ளார். விரைவில் அண்ணாமலை விசாரணைக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களை நியமிப்பார் என்றும் தகவல் கூறியுள்ளார். தன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழக பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி ராகவன் விலகி உள்ளார். அவரைப் போலவே இன்னும் பலரது வீடியோக்கள் தன்னிடம் வீடியோக்கள் இருப்பதாக மதன் கூறியுள்ளதால் அக்கட்சியினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன், ஊடகங்களில் பங்கேற்று பாஜக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து பிரபலமானவர் அவர்.

நேற்று சமூகவலைதளத்தில் அவர் குறித்த ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் பெண் ஒருவருடன் வீடியோ காலில்  பேசுவது போல அந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன. தனக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தனது பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்த அவர் தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும், என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யாரென்று தெரியும், நான் முப்பது வருடமாக எந்த ஒரு பிரதிபலனுமின்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும், என் கட்சியையும் கலங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் கே.டி ராகவன் பாஜகவிலிருந்து விலகி உள்ள நிலையில், அவர் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க பாஜக மாநில செயலாளர் மலர்கொடி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மலர்கொடி கூறியதாவது, கே.டி ராகவன் மீதானா பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நாங்கள் உடனடியாக விசாரணையை தொடங்க இருக்கிறோம். அதற்காக குழுவை அண்ணாமலை நியமித்துள்ளார். அந்த குழுவில் யார் யார் இடம்பெறுவர் என்பதை அண்ணாமலை முடிவு செய்வார்.  புகாருக்கு ஆளாகியிருக்கும் கே.டி ராகவனை விசாரிக்க இருக்கிறோம், அதேபோல் அவருடன் வீடியோ காலில் இருக்கும் அந்தப் பெண் யார் என்பதும் அடையாளம் தெரிந்துள்ளது. அந்தப் பெண் ராகவனுடன் எப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் என்பதை விசாரிக்க உள்ளோம். 

அந்த சம்பந்தப்பட்ட பெண் கட்சியில் என்னவாக இருக்கிறார் என்பது குறித்தும் விசாரிவருகிறோம், ஒருவேளை ராகவனை சிக்கவைக்க அந்தப்பெண் திட்டமிட்டு செயல்பட்டாரா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற உள்ளது, அண்ணாமலை காவல் அதிகாரியாக இருந்தவர் என்பதால் அவரது தலைமையிலான விசாரணை எவ்வளவு நேர்மையாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். இதை உடனே விசாரித்து விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதால், உடனே விசாரிக்க இருக்கிறோம். அதற்கான அறிக்கையை தலைவர் அண்ணாமலை இடம் விரைவில் வழங்குவோம் எனக் கூறியுள்ளார். மேலும் முன்னதாக இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மதன் ரவிச்சந்திரன் இதுபோல இன்னும் 14 பேரின் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாக அவர் கூறியிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

click me!