என்ன ஆச்சு விஜயகாந்த்துக்கு…நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி…

Asianet News Tamil  
Published : Mar 23, 2017, 02:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
என்ன ஆச்சு விஜயகாந்த்துக்கு…நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி…

சுருக்கம்

vijaikanth inhospital

என்ன ஆச்சு விஜயகாந்த்துக்கு…நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி…

தேமுதிமு தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக  சென்னை மியாட் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவ மனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்வதைப் போல், இந்த ஆண்டும் மியாட் மருத்துமனைக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள், ரசிகர்கள் யாரும் மருத்துவமனை வர வேண்டாம் எனவும் தே.மு.தி.க., சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Chief Minister Vijay: கொண்டாட்டத்தில் தமிழ்நாடு..! ராகுல், முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
MK Stalin: வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றியை கூட சொல்லாத காங்கிரஸ்..! ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்..