
ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் திமுக, அதிமுகவின் 3 அணிகளும், பாஜக, தேமுதிக, மார்க்சிஸ்ட் உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷை ஆதரித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பிரசாரம் செய்கின்றனர்.
அதிமுக ஓபிஎஸ் அணியில் உள்ள மதுசூதனனுக்கு முன்னாள் அமைச்சர்கள் பிரசாரம் செய்கின்றனர். சசிகலா அணி வேட்பாளர் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் பிரச்சாரம் செய்கின்றனர்.
தேமுதிக வேட்பாளர் லோகநாதனுக்கு, விஜயகாந்த் உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், பிரச்சாரம் செய்ய முடியாமல், இருந்தார்.
இந்நிலையில், நாளை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தனை நாள், கட்சியின் தலைவர் பிரச்சரத்துக்கு வராமல் இருந்ததால், தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்வடைந்து காணப்பட்டனர். தற்போது, விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உற்சாகம் அடைந்துள்ளனர்.