"தலைகீழாக நின்றாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது" - டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி

 
Published : Apr 08, 2017, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
"தலைகீழாக நின்றாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது" - டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி

சுருக்கம்

bjp will never win in TN says dinakaran

தலைகீழாக நின்றாலும் பாஜகவால் தமிழகத்திற்குள் நுழைய முடியாது என்றும் 25 ஆண்டுககள் ஆனாலும் இங்கு காலூன்ற முடியாது என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்தபோது அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என கேள்வி எழுந்தது, அப்போது  நடந்த பஞ்சாயத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ளது.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு  காரணம் ஓபிஎஸ்ம், மு.க.ஸ்டாலினும்தான் என தினகரன் குற்றம் சாட்டினார்.. இதற்கு பாஜகவும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்த டி.டி.வி.தினகரன், நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தை விரைவில் மீட்போம் என கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்றும் அப்பல்லோ மருத்துமனையும் எய்ம்ஸ் மருத்துவமனையும் அவரது மரணம் குறித்து தெளிவாக அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து நீதி விசாரணை நடத்த எந்தவிதத்திலும் தமிழக அரசும்,அதிமுகவும் தடையாக இருக்காது என அவர் கூறினார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றும் 25 ஆண்டுககள் ஆனாலும் பாஜக இங்கு காலூன்ற முடியாது என்று டி.டி.வி.தினகரன் உறுதிபடத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!