கல்யாண நாளில் மனைவியுடன் கலக்கிய விஜயகாந்த்... அமெரிக்காவில் அசத்தும் கேப்டன்..!

Published : Jan 31, 2019, 11:07 AM IST
கல்யாண நாளில் மனைவியுடன் கலக்கிய விஜயகாந்த்... அமெரிக்காவில் அசத்தும் கேப்டன்..!

சுருக்கம்

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் தனது 30 வது திருமண நாளை மனவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால் அவரது கட்சித் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் தனது 30 வது திருமண நாளை மனவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால் அவரது கட்சித் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதியுற்று வருகிறார். இதற்காக சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் சிகிச்சை பெற்று திரும்பிய அவர், மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்து அவர் திரைப்படம் பார்க்கும் புகைப்படங்கள், குடியரசு தின விழாவிற்கு வாழ்த்து சொல்லிய வீடியோக்களை அவ்வப்போது அவரது அவரது தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அவருக்கு இன்று 29 வது திருமண நாள். இதனையொட்டி விஜயகாந்த தனது மனைவி பிரேமலதாவுடன் கேக் வெட்டி கொண்டாடும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் விஜயகாந்த- பிரேமலதா தம்பதியருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கவலைப்பட்டு கிடந்த அவரது தொண்டர்கள் கேப்டன் ஆரோக்கியத்துடன் இருப்பதால் மீண்டும் அரசியலில் மிடுக்காக களமிறங்குவார் என மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.  
 
PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!