விஜயகாந்த் இனி வெளியே வரமாட்டாராம்..! ஷாக் கொடுக்கும் தே.மு.தி.க...!

By thenmozhi gFirst Published Nov 3, 2018, 5:24 PM IST
Highlights

தமிழக அரசியல் மேல் பக்கத்து மாநில அரசியல் தலைவர்களுக்கு பெரும் பொறாமை இருந்தது. காரணம்? அரசியல், இலக்கியம் இரண்டையும் கலந்தெடுத்து உருவான ஆளுமையாக கருணாநிதி! ஆன்மிகமும், ஆளுமையும், பன்மொழி புலமையும் பொதிந்த ஆளுமையாக ஜெயலலிதா! என்று தமிழக அரசியலில் இமயங்களாய் எழுந்து நின்றனர். 

தமிழக அரசியல் மேல் பக்கத்து மாநில அரசியல் தலைவர்களுக்கு பெரும் பொறாமை இருந்தது. காரணம்? அரசியல், இலக்கியம் இரண்டையும் கலந்தெடுத்து உருவான ஆளுமையாக கருணாநிதி! ஆன்மிகமும், ஆளுமையும், பன்மொழி புலமையும் பொதிந்த ஆளுமையாக ஜெயலலிதா! என்று தமிழக அரசியலில் இமயங்களாய் எழுந்து நின்றனர். 

அதேபோல் விஜயகாந்தைப் பார்த்தும் அவர்களுக்கு ஒரு மிரட்சி இருந்தது. கட்சி துவங்கிய மிக குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு கட்சியை ஆளுங்கட்சியாக மாற்றும் திறனுடைய ஒரு கட்சியாக தே.மு.தி.க. வளர்ந்து நின்றதை பார்த்து மிரண்டது பக்கத்து தேச அரசியல். 

ஆனால் எப்படி குறுகிய காலத்தில் உச்சம் தொட்டாரோ அதேபோல் மிக குறுகிய காலத்தில்  விஜயகாந்த் சரிவையும் சந்தித்ததுதான் மிகப்பெரும் சோகம். விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் இருப்பதால் அவரது மகன் விஜயபிரபாகரன் அரசியலுக்குள் காலெடுத்து வைத்துள்ளதோடு, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கழக பொருளாளராகவும் பதவியேற்றுள்ளார். 

இந்நிலையில், புதிய பொருளாளரான பிரேமலதா, கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆய்வு செய்து வருகிறாராம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், “நம் கட்சியை எப்படி கட்டிக் காத்து இமயம் தொட வைத்தார் நம் கேப்டன் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் கடந்த 2011 தேர்தலில் நாம் அ.தி.மு.க.வுடன் சென்றது பெரும் தவறு. அடுத்த சில மாதங்களில் வெளியே வந்துவிட்டு மீண்டும் கட்சியை உயர்த்தினார் தலைவர். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்போதும் தவறவிட்டுவிட்டோம். 

இதற்கிடையில் கேப்டன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இது நமக்கு பெரிய இழப்பு. கேப்டன் இனி வெளியில் வரமாட்டார். தொடர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். இனி நான் தான் நம் கழகத்தின் எல்லா மேடைகளிலும் பேசுவேன். தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சியை வளர்ப்பேன்.” என்று ஆதங்கமும், அழுத்தமும் பொங்க பேசினாராம். 

கண்ணீர் மல்க இதற்கு கைதட்டி இருக்கிறார்கள் தே.மு.தி.க.வின் மாநில நிர்வாகிகள். நிகழ்வு முடிந்து வெளியே வந்தவர்கள் “கேப்டன் இனி வெளியே வரமாட்டார்ன்னு இந்தம்மாவே சொல்லிட்டாங்கன்னா, தலைவர் எந்தளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு புரியுது. ஆனால் நம் கட்சிக்கு தொண்டர்கள் கூடியதும், மக்கள் ஆதரித்ததும் கேப்டன் அப்படிங்கிற ஒற்றை நபருக்காகத்தான். அவர் இல்லாத நிலையில் அதே ஆதரவு கிடைக்குமா! நிச்சயம் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.” என்று பெருமூச்சுவிட்டு பேசியபடியே கலைந்திருக்கின்றனர்.

click me!