"அது மட்டும்" இல்லேன்னா இந்த ஆட்சியை கலைச்சிருப்போம்! மிரட்டல் ரகளையை துவக்கிய ஹெச்.ராஜா!

By thenmozhi gFirst Published Nov 3, 2018, 5:15 PM IST
Highlights

உலகத்திலேயே மோசமான அரசென்றால் அது மோடியின் அரசுதான்! எனும் ரேஞ்சுக்கு தினமும் ஒரு அறிக்கை, பேட்டி என்று தட்டிவிட்டு பி.ஜே.பி.யை டென்ஷன் மோடிலேயே வைத்திருக்கிறார் மாநிலங்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை. 

"அது மட்டும்" இல்லேன்னா இந்த ஆட்சியை கலைச்சிருப்போம்!  மிரட்டல் ரகளையை துவக்கிய ஹெச்.ராஜா!

உலகத்திலேயே மோசமான அரசென்றால் அது மோடியின் அரசுதான்! எனும் ரேஞ்சுக்கு தினமும் ஒரு அறிக்கை, பேட்டி என்று தட்டிவிட்டு பி.ஜே.பி.யை டென்ஷன் மோடிலேயே வைத்திருக்கிறார் மாநிலங்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை. இது மோடியின் காதுகள் வரைக்கும் போக அவர் சில அஸைன்மெண்டுகளை தன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளதாக தகவல். 

இந்த தகவல் பரவிய நொடியிலேயே தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிரான மிரட்டல் வேலையை பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா துவக்கிவிட்டார் என்கிறார்கள். எப்படி? என்றால்,  மிக சமீபத்தில் அவர் உதிர்த்திருக்கும் வார்த்தைகளை சுட்டிக்காட்டுகிறார்கள். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஒரு அரசியல் வார இதழுக்கான பேட்டியில் வெடித்துப் பேசியிருக்கும் ஹெச். ராஜா “தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க? இந்த ஆட்சியை அவர் கலைக்கணுமா? சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, வாக்கெடுப்பு நடத்தி நீக்குவதைத் தவிர வேறென்ன வழியில்லை. 

எஸ்.ஆர்.பொம்மை வழக்குக்கு முன்னாடி மத்திய அரசு நினைச்சால், கவர்னரின் பரிந்துரை மற்றும் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில ஆட்சியை நீக்க முடிந்தது. ஆனால் இப்போ அந்த நடைமுறை இல்லை.என்னமோ அ.தி.மு.க. எங்களை கூட்டணியில் இருந்து கழட்டி விட முயலுற மாதிரி பேசிக்கிறாங்க. அவங்க என்ன எங்களைக் கழட்டி விடுறது? தமிழக அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி அல்லது பன்னீர் செல்வமோ சொல்ற கருத்தைத்தான் நான் எடுத்துப்பேன் மற்றவங்க பேச்சைக் கண்டுக்கிறது. இல்லை!” என்று தட்டி எறிந்திருக்கிறார். 

இதைத்தான் மேற்கோள்காட்டி பேசும் அரசியல் விமர்சகர்கள் “ராஜாவின் கருத்துக்களின் படி பார்த்தா, இந்த ஆட்சி கலைக்கப்படுவதற்கான அவசியம் இருக்கிறது, அதை செய்திட மத்திய அரசும் தயார். ஆனால் சட்டம்தான் தடையாய் நிற்கிறது! என்பது போல இருக்கிறது. 

என்னதான் மத்திய அரசால் மாநில ஆட்சியை கவிழ்க்க முடியாது! என்று ராஜா சொல்லிவிட்டாலும் கூட, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி கலையுங்கள்! என்றெல்லாம் ஐடியா கொடுப்பதென்பது தூண்டிவிடும் செயல்தானே! ஆக அ.தி.மு.க. அரசுக்கு எதிராக ‘கவிழ்ப்பு’ மிரட்டலில் இறங்கிவிட்டார் ராஜா.” என்கிறார்கள்.

click me!