ஆட்சியை தக்க வைக்க 8 தொகுதியில் கட்டாயம் வெற்றி வேண்டும்..! மாஸ்டர் ப்ளான் போட்ட எடப்பாடி...!

By thenmozhi gFirst Published Nov 3, 2018, 1:33 PM IST
Highlights

20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்று அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 
 

20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்று அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 

அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

அதாவது, தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுனான இடைத்தேர்தல் அடுத்த சில மாதங்களில்  நடைப்பெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக அரசு  தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட முதல்வர் பழனிசாமி 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்று தெரிவித்து உள்ளார் 

தினகரனுக்கு ஆதரவாக களத்தில் குதித்து இபிஎஸ்- ஐ பதவியிலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியதால் 18 MLA- க்கள் பதவியை இழந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இது குறித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்யா நாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பு அளித்தார். அதே வேளையில், அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், தேர்தலில் போட்டிஇட எந்த தடையும் இல்லை என தீர்பளித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து காலியாக உள்ள 20 தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக 8 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான முழுமுதற் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் பதவிக்கும், ஆட்சியை  நிலைத்து நிற்க வைப்பதற்கும் ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று வருகிறார்.அந்த வகையில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பதும் அவருக்கு ஒரு சவாலாக உள்ளது. இடைத்தேர்தலிலும் வெற்ற பெற்று, ஆட்சியை தக்க வைக்க முடியும் என்பதில் அதிக நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 
.

click me!