ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம்... பிரேமலதா விஜயகாந்த்!

By sathish kFirst Published Sep 29, 2019, 6:05 PM IST
Highlights

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய ரயில் வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்கத் இந்திய ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதல் கட்டமாக நாட்டில் சில முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களை தனியார் மூலம் இயக்க திட்டம் உள்ளதாகவும், பிறகு பல பெருநகரங்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வேத்துறை தொழிற்சங்கங்கள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அவை அச்சம் தெரிவித்துள்ளன. 

இதுகுறித்துப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம்  பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது; நேர்மையான வழியில் தான் மாணவர்கள் செல்ல வேண்டும். நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம் எனவே படித்து முன்னேற வேண்டும். குறுக்கு வழியில் செல்லக்கூடாது. என்ன மொழியை கற்க வேண்டும் என ஒவ்வொரு தனி மனிதனும் முடிவு செய்ய வேண்டும். மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம். ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

click me!