நாங்குநேரியை மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுத்த பின்னணி... விஷப்பரீட்சையில் காங்கிரஸ்..!

By vinoth kumarFirst Published Sep 29, 2019, 5:50 PM IST
Highlights

நாங்குநேரி எங்களுக்குத்தான் என்று உதயநிதியில் இருந்து பல்வேறு திமுக தலைவர்கள் உரக்கப் பேசிக்கொண்டிருந்த நிலையில், எதுவும் பேசாமல் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்துவிட்டார். இது பெருந்தன்மை அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மு.க.ஸ்டாலின் வைத்திருக்கும் விஷப்பரீட்சை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நாங்குநேரி எங்களுக்குத்தான் என்று உதயநிதியில் இருந்து பல்வேறு திமுக தலைவர்கள் உரக்கப் பேசிக்கொண்டிருந்த நிலையில், எதுவும் பேசாமல் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்துவிட்டார். இது பெருந்தன்மை அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மு.க.ஸ்டாலின் வைத்திருக்கும் விஷப்பரீட்சை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், நாங்குநேரியை கேட்டு வாங்கிவிட்டாலும் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தீவிரமாக இருக்க அதிமுகவோ வேட்பாளரை அறிவித்துவிட்டது. ஆனால், வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் நிதானமாக செயல்பட்டு வந்தது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில் திமுக எங்களுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்ததே விஷப்பரீட்சை என்றுதான் நினைக்கிறோம். அதனால்தான் வேட்பாளர் தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறோம். குமரி அனந்தனை நிறுத்தலாம் என யோசித்தபோதே மு.க.ஸ்டாலின் அதனை விரும்பவில்லை என்று தெரியவந்தது. மேலும், ஊடகங்களும் அதைவைத்து காமெடி செய்வதால் அந்த யோசனையை காங்கிரஸ் கைவிட்டது. 

இந்நிலையில், மாவட்டத் தலைவர் எஸ்.கே.சிவன், எம்.பி.வசந்தகுமாரின் மைத்துனர் காமராஜ், மகன் விஜய் உள்ளிட்ட லோக்கல் நிர்வாகிகள் குறித்து விவாதித்தோம் ஆனால், திட்டமிட்டுதான் திமுக சீட்டை விட்டுக் கொடுத்து இருக்கிறது. அதனால் பொருளாதார ரீதியில் சல்லிபைசாவை திமுக இறக்காது. டெல்லியிலிருந்து தரப்படும் தொகையும் போதாது என்பதால் வசதி படைத்தவரை நிறுத்தினால் மட்டுமே வெற்றிக்கனியைப் பறிக்க முடியும். அதனால் பக்கத்து மாவட்டமான தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ் மகன் ஊர்வசி அமிர்தராஜ் அல்லது ரூபி மனோகரன் நிறுத்த திட்டமிட்டுள்ள யாரை நிறுத்தினாலும் சரி வெற்றிக்கு முழுமையாக பாடுபடவேண்டும். இங்கு நாங்கள் வெற்றி பெற்றால் தான் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வங்கி இருக்கிறது என்பதை திமுகவிடம் நிரூபித்துக் காட்ட முடியும்.

அப்போதுதான் அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத்தில் கணிசமான தொகுதிகளை பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது என்றனர். இதனையடுத்து, பல்வேறு ஆலோசனைக்கு பிறகே ரூபி மனோகரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016 தேர்தலில் இங்கே வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் 74,932 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவருக்கு போட்டியாக நின்று அதிமுக வேட்பாளர் விஜயகுமாரால் 56,617 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. அப்போது, ஃபார்வர்டு பிளாக் தேமுதிக, பாஜக ஆகியவை சேர்ந்து கிட்டத்தட்ட 35,000 வாக்குகள் பெற்று உள்ளன. இதனால், நாங்குநேரியில் கட்டாயம் வெற்றி பெறு ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

click me!