உயர் சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா பயணம் !! பிரேமலதாவுடன் புறப்பட்டுச் சென்றார் !!

Published : Dec 19, 2018, 06:40 AM IST
உயர் சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா பயணம் !! பிரேமலதாவுடன் புறப்பட்டுச் சென்றார் !!

சுருக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  கடந்த சில ஆண்டுகளாவே உடல்நலம் குன்றியுள்ள நிலையில் நேற்று இரவு உயர் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா வுறப்பட்டுச் சென்றார்.  

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  உடல் நலம் குன்றிய நிலையில் அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடு சென்று  வருவார். இந்நிலையில் விஜயகாந்த் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.  அவருடன் அவரது மனைவி பிரேமலதா, அவரது 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

ஏற்கனவே சிகிச்சைக்காக  விஜயகாந்த் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். தற்போது அவர்  இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதாகவும், வரும் தேர்தலில் அவர் புத்துணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்வார் என்றும் அவரது கட்சியினர் கூறியுள்ளனர்

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!