விஜயகாந்த் வீட்டில் விரைவில் டும்டும்டும்..! சின்ன கேப்டனுக்கு பொண்ணு பார்த்தாச்சு

Published : Sep 17, 2019, 10:59 AM ISTUpdated : Sep 17, 2019, 11:02 AM IST
விஜயகாந்த் வீட்டில் விரைவில் டும்டும்டும்..! சின்ன கேப்டனுக்கு பொண்ணு பார்த்தாச்சு

சுருக்கம்

முதலில் விஜயபிரபாகரனுக்கும் பிறகு சண்முகபாண்டியனுக்கும் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் விஜயபிரபாகரனுக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. இதில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் கேப்டன் – பிரேமலதா தம்பதிக்கு பிடித்துவிட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

விஜயகாந்த் – பிரேமலதா தம்பதியினருக்கு 2 மகன்கள். மூத்த மகன் அரசியலில் களம் இறங்கியுள்ளார். இளைய மகன் சினிமாத்துறையில் உள்ளார். இருவருமே சென்னை அருகே உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்தவர்கள். இவர்களில் இளைய மகன் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கூறப்படுகிறது.

 

 

இந்த காதலுக்கு கேப்டன் தம்பதி பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் ஆனால் மூத்தவர் விஜயபிரபாகரன் திருமணத்திற்கு பிறகு இளையவருக்கு திருமணம் என்றும் முடிவெடுத்திருந்தனர். சின்ன கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயபிரபாகரன் அம்மா பார்க்கும் பெண்ணுக்கு ஓகே சொல்லியிருந்தார்.

இதனை தொடர்ந்து முதலில் விஜயபிரபாகரனுக்கும் பிறகு சண்முகபாண்டியனுக்கும் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் விஜயபிரபாகரனுக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. இதில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் கேப்டன் – பிரேமலதா தம்பதிக்கு பிடித்துவிட்டது. 

கோவையை சேர்ந்த அந்த தொழில் அதிபர் மில் மற்றும் மேலும் சில தொழில்களில் முன்னணியில் உள்ளவர் என்று கூறப்படுகிறது. அவரது மகளை விஜயபிரபாகரனுக்கும் பிடித்துவிட்டது என்கிறார்கள். இதே போல் பெண்ணும் விஜயபிரபாகரனுக்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். இதனை அடுத்து இருவீட்டாரும் திருமணத்தை பேசி முடித்த நிலையில் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு