தாயிடம் ஆசி வாங்கி பிறந்த நாளைத் தொடங்கிய பிரதமர் மோடி !

Published : Sep 17, 2019, 10:33 AM IST
தாயிடம் ஆசி வாங்கி பிறந்த நாளைத்  தொடங்கிய பிரதமர் மோடி !

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தனது 69ஆவது பிறந்தநாளில் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்று தன் தாயாரிடம் ஆசிபெற்றார்.  

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 69ஆவது பிறந்தநாளை பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாட அவரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று வருகை தந்தார்.அவருக்கு விமான நிலையத்தில் குஜராத் ஆளுநர், அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபனி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறப்பு வரவேற்பளித்தனர்.

இதைத் தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற மோடி அவரது தாய் ஹீரா பென்னை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இதைத் தொடர்ந்து நர்மதா மாவட்டம் கிவடியா மாவட்டம் வந்த மோடி, கல்வானி சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட்டார். இதன் பின்னர், சர்தார் சகோவர் அணையையும் பார்வையிட்டார். 

தொடர்ந்து, குருதேஸ்வர் கோவில், குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்காவிற்கு சென்ற அவர் அங்கு குழந்தைகளுடன் உற்சாகமாக உரையாடினார். இதையடுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!