பிரதமர் மோடிக்கு இன்று 69 ஆவது பிறந்தநாள்… தலைவர்கள் வாழ்த்து !!

Published : Sep 17, 2019, 09:56 AM IST
பிரதமர் மோடிக்கு இன்று 69 ஆவது பிறந்தநாள்… தலைவர்கள் வாழ்த்து !!

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக மோடிக்கு  பாஜக  தலைவர்கள் மட்டுமின்றி பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. 

இதுகுறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சரான பியூஸ் கோயல் தனது டுவிட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர், தீர்க்கமானவர், மோடி நமக்கு மிகப்பெரிய முன்னோடி, நாம் அனைவரும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் , நமது பிரதமர், நாடுகளின் நட்புறவை பொறுத்தவரை இந்தியாவின் நிலையை கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் முக்கிய பங்காக இருக்கிறார். என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல பாஜக தலைவர்களிடமிருந்தும், கட்சி முழுவதிலுமிருந்து வந்தவர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் நள்ளிரவு முதல் கொட்டத் தொடங்கின. 


இதே போல் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உதுறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!