அமெரிக்காவில் இருந்து நேரடியாக கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற விஜயகாந்த் !! கண்ணீர் மல்க அஞ்சலி!!

By Selvanayagam PFirst Published Aug 20, 2018, 8:58 AM IST
Highlights

கடந்த 40 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த மேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில், நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

கடந்த மாதம் 7-ம் தேதி  சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு சுமார் 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அமெரிக்காவில் அவருக்கு  உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது,

அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறது  விஜயகாந்த் மிகுந்த உற்சாகத்துடனும், புதுத் தெம்புடனும் காணப்படும்   புகைப் படங்களை அவர் தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் மரணமடைந்தார். இது குறித்து விஜயகாந்திடம் சொல்லப்பட்டபோது அவர் கதறி அழுதார். இது தொடர்பாக அப்போது அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் விஜய்காந்த் கதறி அழுது தனது துக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது  அனைவரது மனதையும் உருகச் செய்தது.

இந்நிலையில் விஜயகாந்திதுக்க  முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தார்

இதனையடுத்து அங்கிருந்து வீட்டிற்குசெல்லாமல் தனது குடும்பத்தினருடன்  நேராக சென்னை மெரினாவிலுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதிக்கு சென்றார் சரியாக அதிகாலை 2.45 மணிக்கு திமுக தலைவர் நினைவிடத்தில் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தினார்.

நீண்ட நேரம் கண்ணிர் மல்க அவர் கருணாநிதி சமாதி முன்பு நின்றிருந்தார். அவருடன் அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக துணைச்செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்

click me!