கோதாவில் குதித்தார் விஜயகாந்த் - ஆர்.கே நகரில் தனித்து போட்டி... வேட்பாளர் பெயரும் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Mar 12, 2017, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
கோதாவில் குதித்தார் விஜயகாந்த் - ஆர்.கே நகரில் தனித்து போட்டி... வேட்பாளர் பெயரும் அறிவிப்பு

சுருக்கம்

vijayakanth announced nominee in rk nagar

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக வட சென்னை மாவட்டச் செயலாளர் மதிவாணன் போட்டியிடுவார் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைந்ததையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக வரும் 15 ஆம் தேதி வேட்பாளர் பெயரை அறிவிக்கும்  என தெரிகிறது.ஓபிஎஸ் அணியினர் இன்று அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார். வட சென்னை தேமுதிக மாவட்டச் செயலாளர் மதிவாணன் க்கட்சியின் சார்பில் போட்டியிடுவார் எனவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

மற்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பாக தேமுதிக முந்திக்கொண்டு வேட்பாளரை அறிவித்துள்ளார்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் இந்தக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறமுடியவில்லை.

தற்போது தேமுதிக தனித்து போட்டியிடுகிறது, மக்கள் நலகூட்டணியும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!