"சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோ தம்பியின் கல்விச்செலவை அதிமுக ஏற்கும்" - ஜெ. பாணியில் ஓபிஎஸ் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Mar 12, 2017, 09:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
"சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோ தம்பியின் கல்விச்செலவை அதிமுக ஏற்கும்" - ஜெ. பாணியில் ஓபிஎஸ் அறிவிப்பு

சுருக்கம்

ops pay homage to bridjo body

இலங்கை கடற்படையினரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ தம்பியின் முழு கல்விச் செலவையும் அதிமுக ஏற்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, கடந்த வாரம் தனுஷ்கோடி அருகே ஆதம்பாலம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது  இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இதனைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டார்.

பின்னர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பிரிட்ஜோவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிரிட்ஜோவின் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களிடையே பேசிய ஓபிஎஸ்,

பிரிட்ஜோ இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட  துயர சம்பவம் தமிழக மக்களின் மனதில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

இனிமேல் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது மத்திய–மாநில அரசுகளின் கடமை என்று தெரிவித்த ஓபிஎஸ். இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி எதிர்காலத்தில் மீனவர்களின் உயிரிழப்பு நடக்காமல் தடுக்க வலியுறுத்தப் போவதாக கூறினார்.

பிரிட்ஜோ குடும்பத்தின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பிரிட்ஜோவின் சகோதரரின் கல்விச்செலவை அதிமுக. ஏற்றுக்கொள்ளும் என்றும் ஓபிஎஸ் அறிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!