ஜெ.,வையே கதிகலங்க வைத்தவர் நம்மாளு! நான் பயங்கரவாதியா?: யார், எங்கே, எப்போ சொன்னார்கள்.

 
Published : Jan 12, 2018, 10:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
ஜெ.,வையே கதிகலங்க வைத்தவர் நம்மாளு! நான் பயங்கரவாதியா?: யார், எங்கே, எப்போ சொன்னார்கள்.

சுருக்கம்

vijayakanth against speech to jeyalalitha in assembly

அரசியலில் செயல்களை விட ‘சொல்’களே அலாதியாய் ஆதிக்கம் செலுத்துபவை! நேற்று மற்றும் இன்று, எந்த அரசியல் தலைவர், யாரைப் பார்த்து என்ன சொன்னார்கள்? என்பதை டீல் செய்யும் பகுதி இது...
*    மதராஸா பள்ளிகளில் பயங்கரவாதம் கற்பிக்கப்படுவதாக சொல்வதை ஏற்க முடியாது. நானும் அங்கே படித்தவன் தான். நான் பயங்கரவாதியா?
-    மத்தியமைச்சர் அப்பாஸ் நக்வி
*    ஜெயலலிதா பயங்கரவாதத்தை எதிர்த்தார். ஆனால் இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அக்கறை காட்டினார். தி.மு.க. தலைவர் போல் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, போர் முடிந்ததும் போய்விடவில்லை.
-    அமைச்சர் தங்கமணி.
*     கொள்கைகளை மறந்து பா.ஜ.க., ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் 14 வருடங்கள் மத்திய பதவியிலிருந்தது தி.மு.க.
-    எடப்பாடி பழனிசாமி
*    உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 48%மாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் பட்டப்படிப்பு முடிப்போருக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது
-    பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.
*    மக்கள் பிரச்னையை பேச தைரியம் வேண்டும். சட்டசபையில் ஜெயலலிதாவையே கதிகலங்க வைத்தவர் விஜயகாந்த். இவரா எடப்பாடி  பழனிசாமிக்கு பயப்படுவார்?
-    பிரேமலதா
*    போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக் நடைபெறும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வு பெறும் மசோதாவை துவக்க நிலையிலேயே எதிர்க்கிறோம். இதை ஆதரித்தால் மக்கள் எங்களைப் பார்த்து சிரிப்பர்.
-    ஸ்டாலின்
*    கொசு ஒழிப்பு பணியில் தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்டதுடன், ஊழலிலும் ஈடுபட்டது என்பதுதான் உண்மை.
-    அன்புமணி ராமதாஸ்.
*    வாஜ்பாய், அத்வானி காலங்களில் கட்சியின் சாதாரண தொண்டர் கூட கட்சியின் தலைவரை எளிமையாய் சந்திக்க முடியும். ஆனால் இப்போது உள்ள பா.ஜ.க. தலைவரை மூத்த, முக்கிய நிர்வாகிகள் கூட சந்திக்க முடியவில்லை.
-    ய்ஷ்வந்த் சின்ஹா.
*    தமிழ் உணர்வை பாதிக்கும் வகையில் வைரமுத்து பேசிய அன்றைய நாளில் என் வீட்டு பூஜை அறையில் இருந்த ஆண்டாள் படம் கீழே விழுந்துவிட்டது.
-    விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன். 
*    இலவசங்களை கொடுப்பதன் மூலம் மக்கள் பணத்தை வீணடிக்கின்றனர். தேவையான மக்களுக்கு பயன்படும் வகையில் அரசின் திட்டங்கள் இருக்க வேண்டும். 
-    கிரண் பேடி. 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!