
சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த், தற்போது வரை ஒரு படத்தில் நடிக்க மாட்டாரா என ஏங்கும் அளவிற்கு இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அரசியல் வட்டாரத்தில் மிகவும் நல்ல மனிதர் என பெயர் பெற்றவர்.
இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதகால சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் மீண்டும் விஜயகாந்த் இன்னும் ஒரு வாரத்தில் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சைகள் பெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் பொதுவாகவே "விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூர் சென்று மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம் தான். அதேப்போல இந்த ஆண்டும் மருத்துவ பரிசோதனைகாக விஜயகாந்த் சிங்கபூர் மருத்துவமனையில் அட்மிட் ஆக உள்ளதாகவும், சிங்கப்பூருக்கு ஒருவாரத்துக்குள் அவர் செல்லவுள்ளார்" என தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டபட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நிர்வாகிகள் திடீர் என விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்துள்ளர்.