தமிழ்நாட்டுக்கு புடிச்ச கெரகம்.. இவங்கலாம் அமைச்சர்களா இருக்காங்க..! அமைச்சர்களை கிழித்து தொங்கவிட்ட திண்டுக்கல் லியோனி..!

Asianet News Tamil  
Published : Nov 26, 2017, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
தமிழ்நாட்டுக்கு புடிச்ச கெரகம்.. இவங்கலாம் அமைச்சர்களா இருக்காங்க..! அமைச்சர்களை கிழித்து தொங்கவிட்ட திண்டுக்கல் லியோனி..!

சுருக்கம்

dindigul leoni tease and criticize ministers

தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சிலரை மிகக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் கிண்டலாக பேசியுள்ளார் திண்டுக்கல் லியோனி.

திமுக மருத்துவ அணி சார்பில் புதுக்கோட்டை நகரில் திலகர் திடலில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திண்டுக்கல் லியோனி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விளாசித் தள்ளினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், தமிழ்நாட்டின் அமைச்சராக இருக்கிறார். அவர் யார் என்பது உங்களுக்கே தெரியும். விஜயபாஸ்கர் தான். அவர் எம்பிபிஎஸ்-ஐ எம்பி எம்பி(குதித்து) படித்த டாக்டராமாம். அவருக்கு டாக்டர் தொழிலையியும் பார்க்க தெரியவில்லை. அமைச்சர் சேவையையும் செய்யத் தெரியவில்லை. மனுஷன் இரண்டையும் போட்டு குழப்பி மக்களை சாகடிக்கிறார். எப்படினு கேட்கிறீங்களா? சேவையா செய்ய வேண்டிய அமைச்சர் பணியை முழுநேர தொழிலாக மாற்றிவிட்டார். தொழிலாக பார்க்க வேண்டிய மருத்துவ பணியை மொத்தமாகவே மறந்துவிட்டார். விஜயபாஸ்கருக்கு அமைச்சராக இருப்பதற்கும் தகுதி இல்லை.. டாக்டராக இருப்பதற்கும் தகுதி இல்லை என விஜயபாஸ்கரை திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்தார்.

விஜயபாஸ்கருன் நிறுத்தாத லியோனி, மற்ற சில அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழ்நாட்டுக்கு பிடித்த கெரகம், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அப்புறம் எங்க ஊர் பேரைக் கெடுக்க வந்த திண்டுக்கல் சீனிவாசன் இவர்களெல்லாம் அமைச்சர்கலாக இருக்கிறார்கள் என விமர்சித்தார். 

அத்துடனும் நிறுத்தாத லியோனி, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐப் போன்று குரலை மாற்றி பேசி கிண்டலடித்தார். 

வாய்க்கு வருவதை எல்லாம் பேசி சர்ச்சையில் சிக்குவதோடு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் அமைச்சர்களைத்தான் திண்டுக்கல் லியோனி கிண்டலாக விமர்சித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

பாமக பொதுக்குழுவில் கண்ணீர் சிந்திய ராமதாஸ்... கதறிய தொண்டர்கள்!
தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த அருள்