
கந்து வட்டியால் நாளை விவசாயிகளும் இறக்க நேரிடும். அப்போது விஜயகாந்த் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாயை நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜயாகாந்த் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என கூறினார்கள். ஆனால் ஓராண்டிலேயே ஜெயலலிதா மறைந்து போய்விட்டார்.
ஜெயலலிதா மறைந்த ஓராண்டில் லஞ்சத்திலும் ஊழலிலும்தான் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் பலி என்கிறார் அமைச்சர். கந்துவட்டிக்கொடுமையால் நெல்லையில் தீக்குளித்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய எடப்பாடி அரசால் கந்துவட்டி கொடுமையை ஒழித்து கட்ட முடியவில்லை. கந்து வட்டியால் நாளை விவசாயிகளும் இறக்க நேரிடும்.
அப்போது விஜயகாந்த் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பயன்படுத்தி ஈபிஎஸ், ஓபிஎஸ் சம்பாதிக்கிறார்கள். மேலும் பேசிய அவர் சிவாஜி, கமலை விட ஈபிஎஸ், ஓபிஎஸ் சிறந்த நடிகர்கள். அதிமுக தொண்டர்கள் விரைவில் தேமுதிகவுக்குதான் வருவார்கள்.