நீங்க என்னதான் தாயத்தை உருட்டினாலும் உங்க கனவு பலிக்காது... யாரை சொல்கிறார் விஜயபாஸ்கர்?

 
Published : Jan 22, 2018, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
நீங்க என்னதான் தாயத்தை உருட்டினாலும் உங்க கனவு பலிக்காது...  யாரை சொல்கிறார் விஜயபாஸ்கர்?

சுருக்கம்

vijayabaskar slams DMK Active chief stalin

நீங்கள் என்னதான் தாயத்தை உருட்டினாலும்  அவர் கனவு ஒருபோதும் கனவு பலிக்கப்போவதில்லை ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் கோலாகலமாக அதிமுகவினரால் நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விழாவில்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தினமும் பேசும்போது ரஜினி, கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்றைய விழாவில் பேசிய அவர்; "திரையுலகிலிருந்து சில நடிகர்கள் அரசியலுக்குப் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்றால், 'இரண்டே நிமிடத்தில் ஆயிரம் கிலோ மீட்டரை, கவனமாகக் கேளுங்கள்.

ஆயிரம் மீட்டர் இல்லை.' ஆயிரம் கிலோ மீட்டர் தாண்ட முயற்சிக்கிறார்கள். அது சாத்தியமில்லாதது. அரசியல் எனும் சுழலிலும் சூறாவளியிலும் முதல் சுற்றிலேயே அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பார்த்துவிட்டு அரசியலுக்கு வர துடிக்கிறார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர் நமது தலைவரும் தலைவியும் எங்கே... இவர்கள் எங்கே?  சினிமாவில் தாங்கள் சம்பாதித்த புகழை இழந்து நிற்கப் போகிறார்கள்'' என்றவர், தொடர்ந்து மு.க.ஸ்டாலினை விமர்சித்தார். ``இங்கு ஒருவர் முதல்வராகும் கனவில் இருக்கிறார். என்னதான் தாயத்தை உருட்டினாலும்  அவர் கனவு ஒருபோதும் கனவு பலிக்கப்போவதில்லை. யார் என்ன முயற்சித்தாலும் அ.தி.மு.க எனும் பெரிய மாளிகையிலிருந்து ஒரு செங்கலைக் கூட  அசைக்க முடியாது" என்றார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்