
ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஓ பன்னீர் செல்வம் குற்றம் சுமர்த்தியுள்ளார்.
மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவர் டிசம்பர் 5ம் தேதி இறந்தார். ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருடன் நெருங்கிய தோழியான சசிகலா மட்டுமே உடன் இருந்தார்.
தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூட மருத்துவமனையில் அவரை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. தமிழக ஆளுநர் பொறுப்பில் உள்ள வித்யாசாகர்ராவ் மருத்துவமனைக்கு சென்றபோது ஜெயலலிதாவை பார்க்க அனுமதி மறுக்கப்பட அவர் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
முதலமைச்சர் இறந்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இன்று வரை அவரது மறைவு தமிழகத்தில் புரியாத புதிராய் இருக்கும் வேளையில் ஓ. பன்னீர் செல்வம் திடீரென ஆர்கே நகர் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதாவை மேல்சிகிச்சைகாக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல கூறினேன். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ள இத்தகவல் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.