ஜப்பான் சென்ற அமைச்சருக்கு ... ரிவிட் வைத்த நீதிமன்றம்...!

First Published May 18, 2018, 2:48 PM IST
Highlights
vijayabaskar japan tour


தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்திற்கும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மேம்பாட்டிற்கும் நிதியுதவி அளித்ததற்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் முதுநிலை துணைத்தலைவர் திரு.ஜூனிச்சி யமடா மற்றும் முதுநிலை இயக்குநர் திரு.யோசிகே இனாடா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, இத்திட்டப்பணிகளின்முன்னேற்றம் குறித்து நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்த இருக்கும் பல்வேறு பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கரன்.

இந்நிலையில் தமிழ்நாட்டில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைசெய்ய உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு குறிப்பாக அமைச்சர் விஜய பாஸ்கர்,டி.ஜி.பி ராஜேந்திரன் எனப் பலருக்கும் லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி, திமுக எம்எல்ஏ அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என சுகாதாரத் துறை அலுவலர் சிவக்குமார் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

 

 

click me!