
மூடப்பட்ட டாஸ்மாக் கடையில் இருந்து மது விற்பனை நடப்பதாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி தவறான புகார் கூறியுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் ஆனால் செந்தில் பாலாஜி கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நடத்தும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படமோ, அமைச்சர்களின் படமோ இருப்பதில்லை என்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம் சாடடியுள்ளார்.
அண்மையில் நடந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் 4 முறை அவருக்கு அழைப்பு விடுத்தும் செந்தில் பாலாஜி பதில் அளிக்கவில்லை என்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மதுபான கடைகள் மூடப்பட்ட இடங்களில், உணவகம் என்ற பெயரில் சாராயக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு தவறானது என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.