முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி… மீது புகார் கொடுத்த.. விஜய நல்லதம்பி கைது !

By Raghupati RFirst Published Jan 16, 2022, 8:01 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக சுமார் 3 கோடி ரூபாய்கும் மேல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி முதல் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படை அமைத்து  போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹாசனில் தனிப்படை போலீசாரால் ராஜேந்திர பாலாஜி செய்யப்பட்டார்.

இதையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபது உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி  திருச்சி மத்திய சிறையில் கடந்த 6 ஆம் தேதி அடைக்கப்பட்டார். இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளான மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை நிறைவேற்றும் விதமாக சம்மன் கொடுத்து அழைத்தால், எந்த நேரத்திலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாக விசாரணை அதிகாரியிடம் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பி வேறொரு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பி கோவில்பட்டி அருகே கைது செய்தது தனிப்படை. வேலைவாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக ரவீந்திரன் அளித்த புகாரில் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

click me!