அம்மாடியோவ்….! விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் சிக்கிய 1 கிலோ தங்கம்

Published : Oct 18, 2021, 07:24 PM ISTUpdated : Oct 18, 2021, 07:25 PM IST
அம்மாடியோவ்….! விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் சிக்கிய 1 கிலோ தங்கம்

சுருக்கம்

விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் 1 கிலோ தங்கம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை:  விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் 1 கிலோ தங்கம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக இன்று சோதனையில் இறங்கி உள்ளனர். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள விஜயபாஸ்கர் அண்ணன் உதயகுமார் வீட்டில் 1.06 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.மேலும் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் அவரை போலீசார் இலுப்பூருக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

சோதனையின் போது உதயகுமார் வீட்டில் இருந்து 1 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது. உதயகுமாருக்கு பல்வேறு இடங்களை வாங்கி கொடுத்ததாக தரகர் தர்மலிங்கம் என்பவர் பற்றிய தகவல் விசாரணையில் வெளியாகி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணி..! ஒன்றிணைந்த அதிமுக..! மிஸ்ஸானால் அதோகதி..! இருதலைக் கொள்ளியாய் இபிஎஸ்..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!