தொகுதி பக்கமே தலை காட்டலை... மக்களுக்கு துரோகம் செய்திட்டாங்க- விஜயதாரணிக்கு எதிராக சீறும் விஜய்வசந்த்

By Ajmal Khan  |  First Published Feb 25, 2024, 11:44 AM IST

காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு விஜயதாரணி மாறியது மூன்று முறை வாக்களித்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும்,  காங்கிரஸ் கட்சிக்கும் செய்த துரோகம் என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். 


தொகுதி மக்களுக்கு துரோகம்

தமிழக் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதாரணி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும், காங்கிரஸ் சட்ட மன்ற கட்சி தலைவர் பதவி வழங்கப்படாத காரணத்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்தநிலையில் இது தொடர்பாக கன்னியாகுமர் நாடாளுமன்ற விஜய் வசந்த் கூறுகையில்,

Tap to resize

Latest Videos

விஜயதரணி பாஜகவில் இணைய போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது அவர் பாஜக-வில் இணைந்துள்ளார். இது விளவங்கோடு தொகுதி மக்களுக்கு அவர் செய்த மிக பெரிய துரோகம் விளவங்கோடு தொகுதி மக்கள் அவரை மூன்று முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுத்து அழகு பார்த்தார்கள். இது தொகுதி மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல பெரிய துரோகம் செய்துள்ளார், 

தொகுதிக்கு வராத எம்எல்ஏ

பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி முன்னுரிமை வழங்கவில்லை என அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்று முறை விளங்கோடு சட்டமன்ற தொகுதியில்  அவருக்கு வாய்ப்பளித்தது காங்கிரஸ் கட்சி தான், சட்டமன்றத்தில் கட்சி கொறடாவாகவும்  நியமித்தது.இது ஒரு பொய் சாக்கு, அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கலாம், இது கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்கும்,

இது காங்கிரஸ் கட்சிக்கும் விளவங்கோடு தொகுதி மக்களுக்கும் செய்த துரோகம், விஜயதரணி தொகுதிக்கு வராத எம்எல்ஏ -வாகவே இருந்தார். இது மக்கள் அனைவருக்கும் தெரியும், விளவங்கோடு தொகுதி மக்களும் அவர் மீது அதிருப்தியில் தான் இருந்தனர் அனைவரும் உயர் பதவிக்கு ஆசைப்படுவது வாடிக்கை தான், கட்சி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

கருணாநிதி நினைவிடம் எப்படி அமைக்கப்பட்டிருக்கு தெரியுமா.? சிறப்பம்சம் என்ன.? வெளியான புகைப்படங்கள்

click me!