விஜய் - உதயநிதி புதிய கூட்டணி..! தளபதி பங்களாவின் அருகில் தலைவர் மகன் பங்களா

By Vishnu PriyaFirst Published Jan 23, 2019, 12:01 PM IST
Highlights

முறைத்துக் கொண்டிருந்த இந்த இரண்டு பூனைகளும் திடீரென அக்கம்பக்கத்து மனுஷாளாகி புது கூட்டணியை உருவாக்குவது பலரை யோசிக்க வைக்கிறது.

* ஸ்டாலினின் மகனான நடிகர் உதயநிதி, சென்னை திருவான்மியூரில் புது பங்களா கட்டி குடியேறி இருக்கிறாராம் சமீபத்தில். செம்ம காஸ்ட்லி ரேஞ்ச் பங்களாவான இதற்கு பக்கத்தில்தான் விஜய்யின் பங்களா இருக்கிறது. முறைத்துக் கொண்டிருந்த இந்த இரண்டு பூனைகளும் திடீரென அக்கம்பக்கத்து மனுஷாளாகி புது கூட்டணியை உருவாக்குவது பலரை யோசிக்க வைக்கிறது. இந்நிலையில் அப்பாவிடம் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் வந்த பிறகுதான் ஸ்டாலினுக்கு அரசியலில் புது உச்சங்கள் கிடைத்தன. அதுபோல் உதயநிதியும் அப்பாவிடமிருந்து பிரிந்து போய் பெரிய உச்சத்தை தொடுவாரா? என கிசு கிசுக்கிறார்கள் அக்கட்சியினர். 

* கரூரில் நேற்று ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். இதில் மேடையில் அவருக்கு பின்னே மிக நெருக்கத்தில்தான் சமீபத்தில் அக்கட்சியில் சேர்ந்த செந்தில்பாலாஜி அமர்ந்திருந்தார். அவரைத் தாண்டித்தான் நன்னியூர் ராஜேந்திரன், சின்னசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் அமர முடிந்தது. ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜியின் இந்த ஏகபோக நெருக்கம், மற்ற நிர்வாகிகளை செமத்தியாக பல்லைக் கடிக்க வைத்துவிட்டதாம். ‘நினைச்சமாதிரியே வேலையை காட்டுறாரு பார்த்தீங்களா?’ என்று கொதிக்கிறார்களாம் தங்களுக்குள். 

* தி.மு.க.வின் டெல்லி பிரச்சார பீரங்கியாக இருந்தவர் வைகோ. அக்கட்சியில் இருந்து பிரிந்த பிறகும் கூட டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் தனக்கான செல்வாக்கை உருவாக்கி இருந்தார். ஆனால் சமீபமாக பி.ஜே.பி.க்கு எதிராக உருவாகி நிற்கும் கூட்டணி தலைவர்களின் நிகழ்வுகளில் வைகோ கண்டுக்கப்படாதது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. சமீபத்தில் அண்ணா நூற்றாண்டுவிழா மாநாடுக்கு ஃபரூக் அப்துல்லாவை அழைத்து வந்து பெரும் மரியாதை செய்தார் வைகோ. அவர் கூட தன்னை கண்டுக்கவில்லை எனும் ஏக்கம் பொங்குகிறதாம். அதைவிட, டெல்லியில் புது லாபி பண்ணும் ஸ்டாலின் தன்னை வெகுவாக இந்த விஷயத்தில் அலட்சியப்படுத்துகிறார் என்று தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் புலம்புகிறாராம். 

* கூட்டணிக்கு எத்தனை சீட், தி.மு.க.வுக்கு எத்தனை சீட்? என்று முடிவு செய்துவிட்ட ஸ்டாலின், தி.மு.க.வுக்கான இடங்களில் வேட்பாளர் யார் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டாராம். பெரிய தலைக்கட்டுகளுக்கு எம்.பி. வாய்ப்பு தரப்பட போவதில்லை. ஆனாலும், தங்களின் மாவட்டத்தில் நிற்கும் கழக வேட்பாளருக்கு மிக அபரிமிதமாக செலவை செய்தே ஆக வேண்டும் அவர்கள்! என்று ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளதாக உறுதியான தகவல். இதில் ஏதாவது கோளாறு செய்தால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கல்தா கொடுக்கப்பட்டு, அமைச்சர் கனவு காலி செய்யப்பட்டுவிடும்! என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை வருகிறதாம்.

click me!