
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெர்சல் திரைப்படம் உண்மையில் மெர்சலாகும் அளவிற்கு தான் இருந்தது.இதனால் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது என பெருமூச்சி விடும் சமயத்தில்தான் .....
மெர்சலுக்கு மேலும் ப்ரீ ப்ரோமோஷன் கிடைக்க தொடங்கியது.மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி காட்சி குறித்து கண்டனம் தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்,எச்.ராஜா,தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் மெர்சல் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்தது மட்டுமின்றி அந்த படத்தில் இருந்து ஜிஎஸ்டி காட்சிகளை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுமாரா ஓடின படம் கூட தற்போது சூப்பர் ஹிட் ஆகும் அளவிற்கு.... பிஜேபி செய்த இலவச ப்ரோமோஷன் மூலமாக இன்று வரை திரை அரங்குகளில் கூட்டம் அலை மோதுகிறது என்றால் பாருங்களேன்....
இதன் காரணமாக,அடுத்த 2 நாட்களில் மெர்சல் திரைப்படம் ரூ.200 கோடி வசூலை எட்ட உள்ளது.
படம் ஓடுமா ஓடாதா... என எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்......இந்த அளவிற்கு மாபெரும் வெற்றி பெற செய்த அனைத்து நல்ல உள்ளத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
அதாவது இதற்கு முன்னதாக வந்த படங்களுக்கு பணம் கொடுத்து ப்ரோமோஷன் செய்து வெற்றி பெற்றதை விட, பா.ஜ.க வின் ப்ரீ ப்ரோமஷன் மூலமாக மெர்சல் படம் சர்வதேச அளவில் பிரபலமானது மட்டுமின்றி, விஜயும் புகழின் உச்சிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது