
ஜோசப் விஜய் என்ற பெயரில் "ஜீசஸ் சேவ்ஸ்" என்ற வாசகத்துடன் கூடிய தனது லெட்டர் பேடில் மெர்சல் பட வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்...
சுமாரா ஓடின படம் கூட தற்போது சூப்பர் ஹிட் ஆகும் அளவிற்கு.... பிஜேபி செய்த இலவச ப்ரோமோஷன் மூலமாக இன்று வரை திரை அரங்குகளில் கூட்டம் அலை மோதுகிறது என்றால் பாருங்களேன்....
இதன் காரணமாக,அடுத்த 2 நாட்களில் மெர்சல் திரைப்படம் ரூ.200 கோடி வசூலை எட்ட உள்ளது.
படம் ஓடுமா ஓடாதா... என எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்......இந்த அளவிற்கு மாபெரும் வெற்றி பெற செய்த அனைத்து நல்ல உள்ளத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
அதாவது இதற்கு முன்னதாக பணம் கொடுத்து ப்ரோமோஷன் செய்து வெற்றி பெற்றதை விட, பா.ஜ.க வின் ப்ரீ ப்ரோமஷன் மூலமாக சர்வதேச அளவில் வசூல் சாதனை மட்டுமின்றி, விஜயும் புகழின் உச்சிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், விஜய் வெளியிட்ட நன்றி அறிக்கையில், ஜோசப் விஜய் என்ற பெயரில் "ஜீசஸ் சேவ்ஸ்" என்ற வாசகத்துடன் கூடிய தனது லெட்டர் பேடில் மெர்சல் பட வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்...
குறிப்பாக தற்போது விஜய் வெளியிட்டுள்ள இந்த நன்றி அறிக்கையில், ஜோசப் விஜய் என குறிப்பிட்டு வெளியானதால்,எச்.ராஜா ஏற்கனவே சொன்னது போலவே விஜயின் பெயர் ஜோசப் விஜய் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்