
தேனியில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தின.
விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட தலைமை சார்பில் ஒட்டப்பட்டு இருந்த அந்த சுவரொட்டிகளில் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. ஒரு சுவரொட்டியில், "யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நீங்கள் வரவேண்டும் தலைவா. யாரை நம்பியும் நாம் இல்லை, மக்களைத்தவிர" என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.
மற்றொரு சுவரொட்டியில், "2021 புதிய வருடம், புதிய கட்சி மக்கள் இயக்கம், புதிய அரசியல், புதிய தலைவர், புதிய ஒருவனாக தளபதி, புதிய நம்பிக்கை. தமிழகத்திற்கு நீங்கள் எடுக்கும் முடிவே எங்களின் இறுதி முடிவு தலைவா" என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதுபோன்ற பரபரப்பான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகள் தேனியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன.