தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது ... 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெற்று வருகிறது.

By Ezhilarasan BabuFirst Published Jan 2, 2021, 10:36 AM IST
Highlights

27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போட கால நேர நிர்ணயம் செய்துள்ளோம்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 17 இடங்களில் நடைபெறுவதாக தமிழக சாகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவகிறது. சமீபகாலமாக வைரஸ் படிப்படியாக குறைய தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளும் நிறைவு பெற்றது அது மக்கள் பயன்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும் அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி பரிசோதனை இறுதிகட்டத்தில் உள்ளது. எனவே முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

எனவே, எந்த குழப்பமும் இல்லாமல் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக, பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் ஏற்கனவே இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கான தயார் நிலை தொடர்பாக மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இரண்டு தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அதில் தடுப்பூசி போடும் பணிகளுக்கு மாநில அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும் அந்தந்த மாநில சுகாதாரத் துறைச் செயலாளர்கள் அப்போது விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தடுப்பூசி போடும் பணி தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியது. இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கியுள்ளது. மாநில தலைநகரங்களிலும் இந்த ஒத்திகை மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. 

அதேபோல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்று வருகிறது. சென்னை அரசு  பொது மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் ஆகிய இடங்களில் தடுப்புசி ஒத்திகை நடைபெறுகிறது. தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்கள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் எவ்வித கட்டணமும் இன்றி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில் சென்னை, நீலகிரி, கோவை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ஒத்திகை நடக்கிறது. தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறோம். 47,200 சென்டர்களை நாங்கள் அடையாளப்படுத்தி உள்ளோம். 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போட கால நேர நிர்ணயம் செய்துள்ளோம். 

வெகு விரைவில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும், இது ஒரு புதுவகை வைரசுக்கான தடுப்பூசி, எனவே மிக மிக கவனமாக இருக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும், துல்லியமாக செய்ய வேண்டும், எனவே தான் இதற்கு திட்டமிடுதல் ஒத்திகை முக்கியம். இரண்டரை கோடிப் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். அந்த தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளோம். ஆகவே தமிழகத்தில் 17 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறுகிறது என கூறியுள்ளார். 
 

click me!