நேத்து அவரு... இன்னைக்கு இவரு.. விஜயபாஸ்கர்களை வெச்சு செய்யும் லஞ்ச ஒழிப்பு துறை.!

By manimegalai aFirst Published Oct 19, 2021, 6:42 PM IST
Highlights

கடந்த முறை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம்மன் அனுப்பிய போது உள்ளாட்சி தேர்தலை கார்ணம் காட்டி விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை

கடந்த முறை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம்மன் அனுப்பிய போது உள்ளாட்சி தேர்தலை கார்ணம் காட்டி விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்ததும், அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதை போலவே முறைகேடுகளில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.

அந்தவகையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடஙகளில் சோதனை நடைபெற்றுள்ளது. சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடஙகளில் நேற்று நடைபெற்ற சோதனையில் 5 கிலோ தங்கம், ரூ.23 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல், கடந்த ஜீலை மாதம் முன்னள் போக்குவரத்து துறை அமைச்சர் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியது. ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்தநிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இரண்டு விஜயபாஸ்கர்களையும் திமுக அரசு அடுத்தடுத்து வெச்சு செய்வது அதிமுக-வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!