ஈழத்தமிழர்கள் படுகொலையை ஆதரித்தவருக்கு அம்பேத்கர் விருதா..? திருமாவளவனை வருத்தெடுக்கும் நெட்டீசன்கள்..!

Published : Aug 10, 2019, 03:20 PM ISTUpdated : Aug 10, 2019, 03:21 PM IST
ஈழத்தமிழர்கள் படுகொலையை ஆதரித்தவருக்கு அம்பேத்கர் விருதா..?  திருமாவளவனை வருத்தெடுக்கும் நெட்டீசன்கள்..!

சுருக்கம்

ஈழத்தமிழர் படுகொலையை ஆதரித்த பத்திரிக்கையாளர் என்.ராமுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

ஈழத்தமிழர் படுகொலையை ஆதரித்த பத்திரிக்கையாளர் என்.ராமுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டு தோறும் , தமிழ் சமூகத்தின் சிறந்த 6 ஆளுமைகளை தேர்வு செய்து அவர்களுக்கு, அம்பேத்கர், பெரியார், காமராஜர்,அய்யோத்திதாச பண்டிதர், செய்மொழி ஞாயிறு, மற்றும் காயிதே மில்லத் ஆகியோரின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் இந்தாண்டுக்கான விருதுவழங்கும் நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. 

அதில் இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவரும் பத்திரிக்கையாளருமான என். ராம் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் விருதும், விஐடி பல்கலைகழக வேந்தர் விஸ்வநாதன் அவர்களுக்கு பெரியார் ஒலி விருதும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு, காரமாஜர் கதிர் விருதும், தொழிலதிபர் நல்லிகுப்புசாமி அவர்களுக்கு செம்மொழி ஞாயிறு விருதும், தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவரான நாகப்பனுக்கு அய்யோதி தாசர் ஆதவன் விருதும், இஸ்லாமிய வரலாற்று ஆய்வாலர் எஸ்.திவான் அவர்களுக்கு காயிதே மில்லத் பிறை விருது வழங்கப்பட்டது. 

விருது பெற்ற அனைவருக்கும் தலா 50,000 பண முடிப்பும் வழங்கி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை பாராட்டி பேசினார். மற்றவர்களுக்கு விருது வழங்கியதை பலர் பாராட்டினாலும் பத்திரைக்கையாளர் என். ராம் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதையும், அதுவும் அண்ணல் அம்பேத்கள் பெயரில் விருது வழங்கப்பட்டதற்கும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

 

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த போது தமிழின படுகொலையை ஆதரித்து பேசியதுடன் அது சரி என பிரச்சாரம் செய்தவர்  என். ராம் என்றும், தமிழர்களுக்கு எதிராகவும் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் அவர் பேசியதின் பலனாக, சிங்கள அரசின் உயரிய விருதான லங்கா ரத்னா விருதை பெற்ற என். ராம் அவர்களுக்கு தமிழகத்தில் விருது வழங்குவது. சரியா என்றும் திருமாவளவனுக்கு அவர்கள் கேள்வி எழுப்பு உள்ளனர், இனப்படுகொலையை ஆதரித்த ஒருவருக்கு அம்பேத்கர் போன்ற தலைவரின் பெயரில் விருது வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள் எனவும்  திருமாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

அது குறித்து விளக்கமளித்துள்ள திருமாவளவன், எத்தனையோ பத்திரிக்கைகள் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்தும் தாக்குதல்களை அடக்கு முறைகளை எழுதவும் பேசவும்  தயக்கம் காட்டும் நிலையில், தலித்மக்கள் மீதான தாக்குதல்களை பத்திரிக்கையாளர் என் ராம் அவர்கள் தோலுரித்து காட்டி வருவதால் அவருக்கு அம்பேத்கர் விருது வழங்குவது மிக பொருத்தமான ஒன்று என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!