37+1 அவ்ளோதான்.! அடிதூள்.. படு சூப்பரா டைட்டல் போட்ட தினமலர்..!

By ezhil mozhiFirst Published Aug 10, 2019, 2:48 PM IST
Highlights

அப்படி வெற்றி பெற்றும் எந்த பயனும் இல்லை என்ற பாணியில் பிரபல நாளிதழான தினமலர் 37+1 என தலைப்பிட்டு அனைவரின் கவனத்தை ஈர்க்க செய்து உள்ளது 

37+1 அவ்ளோதான்.! அடிதூள்.. படு சூப்பரா டைடல் போட்ட தினமலர்..!

நடந்து முடிந்த வேலூர்  நாடாளுமன்ற தொகுதியில் திமுக அமோக வெற்றி பெரும் என்ற கணிப்பு இருந்த நிலையில் வெறும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று உள்ளது.

அப்படி வெற்றி பெற்றும் எந்த பயனும் இல்லை என்ற பாணியில் பிரபல நாளிதழான தினமலர் 37+1  என தலைப்பிட்டு அனைவரின் கவனத்தை ஈர்க்க செய்து உள்ளது 

அப்படி என்ன காரணம் என்பது தானே கேள்வி....
 
அதாவது, வேலூர் தொகுதி என்றாலே சிறுபான்மையினர் ஓட்டு திமுகவிற்கு தான் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது. அதிலும் கூட முத்தலாக்  தடை மசோதா நிறைவேற்றம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில்,  இஸ்லாம் பெண்கள் மனமகிழ்ந்து வரவேற்றனர். முத்தலாக் தடை மசோதாவால் இஸ்லாம் பெண்களுக்கு மகிழ்ச்சியே... அப்படி பார்க்கும் போது இஸ்லாம் பெண்களின் வாக்கு கணிசமாக அதிமுக விற்கு கிடைத்து உள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது. இன்னொரு பக்கம், வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் திமுக விற்கு ஆதரவாக ஓட்டுக்கள் சற்று அதிகமாக இருந்துள்ளது.

அதே போன்று... குடியாத்தம் ,கே. வி குப்பம், அணைக்கட்டு பகுதியில் அதிமுகவிற்கு ஆதரவு அதிகமாக இருந்து உள்ளது. அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது போல... வெற்றியை நிர்ணயிக்க தொடர்ந்து ட ஃ ப் கொடுத்து வந்தது அதிமுக மற்றும் திமுக. கடைசியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஏற்கனவே இருந்த திமுக கூட்டணி எம்.பி-க்களின் எண்ணிக்கை 37 லில் இருந்து, 38 ஆக உயர்ந்து உள்ளது. 

கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதால் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திமுக வினருக்கு மட்டும் தான் மகிழ்ச்சியே தவிர... வெற்றி பெற்றதால் என்ன நடக்க போகுது...? அதுவும் 2 அல்லது 3 லட்சம் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெரும் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் .. இது ஒன்னும் திமுக விற்கு இமாலய வெற்றி இல்லை என்ற கருத்தும் பார்க்க முடிகிறது.

மகன் வெற்றி  குறித்து துரைமுருகன் தெரிவித்த போது,

 "இந்த வெற்றி என்பது தளபதி ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு சான்று" என தெரிவித்து உள்ளார்

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த போது,

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறிவந்த நிலையில் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு விஷயமா என்ற பாணியில் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அதிமுக பலமாக தான் உள்ளது என்பது புரிய வைக்கிறது. ஆக மொத்தத்தில், இந்த வெற்றியின் மூலம் திமுகவிற்கு 23 இல் இருந்து 24 ஆக உயர்ந்து உள்ளனர் லோக் சபா எம். பிக்கள். என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!