வேலூரில் 2 மடங்கு வெயிட் காட்டிய மு.க.ஸ்டாலின்... சிதைந்து சின்னாபின்னமாகிய அதிமுக வாக்கு வங்கி..!

By vinoth kumarFirst Published Aug 10, 2019, 2:15 PM IST
Highlights

வேலூர் மக்களவை தேர்தலில் கடுமையான போட்டி இடையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தினார். இந்நிலையில், கடந்த தேர்தலை விட 2 மடங்குக்கு மேல் வாக்குகளை பெற்று திமுக மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. அதேநேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணி பாதிக்கும் குறைவாக வாக்குகளை பெற்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

வேலூர் மக்களவை தேர்தலில் கடுமையான போட்டி இடையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தினார். இந்நிலையில், கடந்த தேர்தலை விட 2 மடங்குக்கு மேல் வாக்குகளை பெற்று திமுக மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. அதேநேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணி பாதிக்கும் குறைவாக வாக்குகளை பெற்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மீதியுள்ள 38 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. 

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளை பெற்றார். அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் திமுக பெற்றுள்ள வாக்குகள் கடந்த தேர்தலை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது. 

 

அதாவது வேலூர் மக்களவை தொகுதிக்கு கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக அணியில் இடம் பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அப்துல் ரஹ்மான் 2,05,896 வாக்குகளை பெற்றார். ஆனால் தற்போது வேலூர் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். அவர் 4 லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய இளஞ்செழியன் 21,650 வாக்குகளை பெற்றார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் சேர்ந்து கடந்த தேர்தலில், 2,27,546 வாக்குகளை பெற்றிருந்தன. ஆனால், இந்த தேர்தலில், கடந்த தேர்தலைவிட 2 மடங்கிற்கும் மேல் அதிக வாக்குகளை திமுக வேட்பாளர் பெற்றுள்ளது. 

அதே நேரத்தில் கடந்த 2014ம் ஆண்டு வேலூர் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட பா.செங்குட்டுவன் 3,83,719 வாக்குகளை பெற்றார். பாஜக, பாமக, தேமுதிக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 3,24,326 வாக்குகளை பெற்றார். தற்போது அதிமுக அணியில், கடந்த முறை 3-வது அணியாக போட்டியிட்ட அத்தனை கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இந்த தேர்தலில் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் இந்த இரண்டு கூட்டணி கட்சிகளும் சேர்ந்து 7,08,045 வாக்குகளை பெற்றது. ஆனால் தற்போது நடைபெற்ற வேலூர் மக்களவை தேர்தலில் திமுக 4,85,340 வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது திமுக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 2,57,794 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது. சுமார் 2 மடங்கு அளவுக்கு திமுகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. இதனால், திமுக வங்கி அரசு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. 

அதிமுக, புதிய நீதிக்கட்சியும் சேர்ந்து 7,08,045 வாக்குகளை பெற்றது. தற்போது அதிமுக அணி 4,77,199 வாக்குகளை தான் பெற்றுள்ளது. அதாவது, 2,30,846 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது. ஆகையால், அதிமுகவின் வாக்கு வங்கி பெருமளவு குறைந்துள்ளது. மேலும், 23 ஆண்டுக்கு பிறகு வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

click me!