முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு பரப்பி வீடியோ... கலாநிதியை வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

Published : May 07, 2021, 04:50 PM IST
முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு பரப்பி வீடியோ... கலாநிதியை வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

சுருக்கம்

தமிழக முதல்வராக இன்று பதவியேற்ற மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் வீடியோ பரப்பியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

தமிழக முதல்வராக இன்று பதவியேற்ற மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் வீடியோ பரப்பியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாநிதி(38). இவர் நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழன் அல்ல. தெலுங்கை பூரவீகமாக கொண்டவர்.  அவரது தந்தை கருணாநிதி பஞ்சம் பிழைக்க வந்தவர். அவர்களுக்கு ஆதரவு அளித்து திமுகவுக்கு ஓட்டளித்த வன்னியர்கள் நேர்மையான பிறப்பு அற்றவர்கள் என பேசிய வீடியோ பதிவை வாட்ஸ் ஆப் மற்றும் முகநூல் ஆகியவற்றில் வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து திமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கலாநிதியை கைது செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி