இனி இந்த கட்சியில் இருந்தால் அரசியல் வாழ்க்கை இல்லை.. குமரியில் குமுறும் அமமுக.. காலியாகும் குக்கர் கூடாரம்.!

By vinoth kumarFirst Published May 7, 2021, 4:20 PM IST
Highlights

இனி அந்த கட்சியில் இருந்தால் அரசியல் வாழ்க்கையே இல்லை என்ற முடிவுக்கு அமமுகவினர் வந்து விட்டார்களாம். ஒட்டுமொத்தமாக குக்கர் கூடாரத்தை காலி செய்து விட்டு, மாற்று  கட்சிகளுக்கு செல்ல தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

இனி அந்த கட்சியில் இருந்தால் அரசியல் வாழ்க்கையே இல்லை என்ற முடிவுக்கு அமமுகவினர் வந்து விட்டார்களாம். ஒட்டுமொத்தமாக குக்கர் கூடாரத்தை காலி செய்து விட்டு, மாற்று  கட்சிகளுக்கு செல்ல தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் குக்கர் கட்சியினர் வாங்கிய சொற்ப ஓட்டுகள் அந்த கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுய நலத்துக்காக சீட் வாங்கி வந்து போட்டியிட்டவர்கள். மேலிடத்தில் இருந்து அதிகளவு தேர்தல் நிதி கிடைக்கும் என்று நினைத்தவர்கள் போட்டிக் போட்டு சீட் வாங்கினாங்களாம். 

ஆனால், தேர்தல் சமயத்தில் பிரசாரம் கூட செய்யாமல் முடங்கி விட்டு, கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கி விட்டாங்களாம். இதனால மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என குமரியில் குக்கர் கட்சியை சேர்ந்த பலரும் வேட்பாளர்கள் மீது கோபத்தில் இருக்கிறார்களாம். கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தும் அதை கேட்காமல் வேலை செய்யாதவர்களுக்கு சீட் கொடுத்து விட்டு இப்போது அவமானப்பட்டு நிற்க வேண்டி இருக்கிறது. 

இனி அந்த கட்சியில் இருந்தால் அரசியல் வாழ்க்கையே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களாம். ஒட்டுமொத்தமாக குக்கர் கூடாரத்தை காலி செய்து விட்டு, மாற்று  கட்சிகளுக்கு செல்ல தயாராகி விட்டனர். இது பற்றி எல்லாம் தெரிந்தும், மாவட்ட முக்கிய நிர்வாகி தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வராமல் கப்சீப் ஆக உள்ளாராம். கடைசி நேரத்தில் அவரும் கட்சி மாறி விடுவார் என்ற பேச்சு பலமாக உள்ளது.

click me!