"வெல்க அண்ணன் உதயநிதி" பாராளுமன்றத்தில் பதவியேற்ற தமிழக எம்பி ....!!!ஆடிப்போன வெங்கைய நாயுடு.

By Ezhilarasan BabuFirst Published Nov 29, 2021, 2:58 PM IST
Highlights

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான பகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருபெரும் திராவிட கட்சிகளில் ஒன்றான அதிமுகவை அணைத்துக் கொண்ட பாஜக, திமுகவை  எதிரியாக பாவித்து வருகிறது. 

நாடாளுமன்றத்தில் பதிவியேற்பின் போது வாழ்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி என்று  கோஷம் எழுப்பிய திமுக உறுப்பினர் கே.ஆர்.எம் ராஜேஷ்குமாரை சபாநாயகர் வெங்கைய நாயுடு கண்டித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் எழுப்பும் கோஷம் அவை குறிப்பில் இடம் பெறாது வெளியில் சென்று என்ன வேண்டுமானாலும் கோஷமிடுங்கள் என அவர் அவையிலேயே கடிந்து கொண்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான பகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருபெரும் திராவிட கட்சிகளில் ஒன்றான அதிமுகவை அணைத்துக் கொண்ட பாஜக, திமுகவை  எதிரியாக பாவித்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்ற தலைவர்களை தொடர்ந்து பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தும் பேசியும் வருகின்றனர். தமிழகத்தில் எச். ராஜா முதல் தேசிய அளவில் ஜே.பி நட்டா வரை திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திமுக என்பது ஊழல் கட்சி, அது குடும்ப கட்சி என ஜே.பி நட்டா சமீபத்தில் திமுகவை பகிரங்கமாக விமர்சித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மோடியும் தன் பங்குக்கு, ஒரு குடும்பத்திடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என திமுகவை நேரடியாகவே அவர் விமர்சித்து வருகிறார். இப்படி திமுக பாஜக பகை நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், இந்த எதிர்ப்பு பாராளுமன்றம் வரை ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்பிக்கள் பதவி ஏற்றுக் கொண்டபோது சில திமுக உறுப்பினர்கள் வழக்கத்துக்கு மாறாக வாழ்க தமிழ்.. வளர்க  தமிழ்நாடு என முழக்கமிட்டனர். அதற்கு பதிலாக பாஜக எம்.பிக்களும் பாரத் மாதா கி ஜெ... என்ன கோஷம் எழுப்பினர் இதனால் அப்போது  மக்களவையில் சலசலப்பை ஏற்பட்டது. அதேபோல் தயாநிதி மாறன் உள்ளிட்ட சில எம்பிகள் தமிழ் வாழ்க.. வாழ்க கலைஞர்.. வாழ்க பெரியார் என்று முழக்கம் விட்டனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிஜக எம்பிக்கள். ஜெய் மாதா கி.. ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இது அப்போது இரு கட்சிக்கும் இடையே சித்தாந்த ரீதியாக உள்ள பகையை வெளிச்சம்போட்டு காட்டுவதாக இருந்தது. அப்போது அது பெரும் விவாதப் பொருளாக மாறியது. 

அதேபோன்ற ஒரு நிகழ்வு இப்போதும் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் திமுகவை சேர்ந்த எம்.எம் அப்துல்லா, கனிமொழி மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மூவரும் எம்பிக்கள் ஆக பதவி ஏற்றுக் கொண்டனர். அப்போது ராஜேஷ்குமார் பதவியேற்பு உறுதிமொழிக்கு பிறகு, வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி அவர்கள் என்று முடித்தார். அப்போது குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், நீங்கள் எழுப்பும் கோஷங்கள் எல்லாம் அவை குறிப்பில் இடம் பெறாது, வெளியில் சென்று என்ன வேண்டுமானாலும் கோஷமிடுங்கள் அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார். பதவியேற்பு உறுதிமொழி எடுக்கும் போது முழக்கங்களை எழுப்பக்கூடாது இது சட்டத்திற்கு மாறானது என வெங்கைய நாயுடு கூறினார். அவரின் இந்த அட்வைஸ் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் ஒருவர், அரசியலுக்கு வந்து ஒரு சில ஆண்டுகளேயான, ஒரு சட்டமன்ற உறுப்பினரான உதயநிதியின் பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியம்தானா? என்று பலரும் திமுக எம்பியை விமர்சித்து வருகின்றனர். மேலும் இதை பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர். சுயமரியாதை பேசி வளர்ந்த இயக்கம் இப்போது சுய மரியாதை இல்லாமல் போய்விட்டது. நாடாளுமன்றத்தில் அண்ணன் உதயநிதி வெல்க என்று சொல்வதற்கு என்ன அவசியம் என்ன வந்தது, இதுபோன்ற எம்பிகள் யார் காலை பிடிச்சா என்ன காரியம் நடந்தால் போதாதா என்ற வகையில் இப்படி பேசுகிறார்கள் என்று எம்.பி கே.ஆர்.எம் ராஜேஷ்குமாரை விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலர் சேப்பாக்கம் சேகுவேரா மண்டை உடைந்தது என  திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை கலாய்க்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். 
 

click me!