ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்....துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்களவை சபாநாயகருக்கு அனுப்பினார்

Asianet News Tamil  
Published : Jan 06, 2018, 07:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்....துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்களவை சபாநாயகருக்கு அனுப்பினார்

சுருக்கம்

Vice President Venkaiah Naidu sends the Lok Sabha to the speaker against Rahul Gandhi

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜனதா எம்.பி. அளித்த புகாரையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸைமக்களவை சபாநாயகருக்கு மாநிலங்கள் அவை தலைவர் வெங்கையா நாயுடு அனுப்பி உள்ளார்.

நோட்டீஸ்

மக்களவை எம்.பி. ராகுல் காந்தி இருப்பதால், அந்த அவையின் தலைவர் சுமித்ரா மகாஜனுக்குநோட்டீஸை அனுப்பியுள்ளார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்று மாநிலங்கள் அவை தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. 

டுவிட்டர்

கடந்த மாதம் 27-ந்தேதி ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் அறிவிப்பில் “ அன்புள்ளஜெய்லி(ெஜட்லி), இந்தியாவை நினைவு படுத்தியதற்கு நன்றி. பிரதமர் மோடி ஒருபோதும் அப்படி நினைத்து சொல்லவில்லை, நான் சொன்னதை அப்படி நினைக்காதீர்கள் சொல்லிவருகிறார் ’’ என்று கிண்டலாகத் தெரிவித்தார். மேலும் அருண் ஜெட்லியை‘ஜெய்ட்லை’ என பொய்யர் எனப் குறிப்பிட்டு இருந்தார்.

உரிமை மீறல் தீர்மானம்

ராகுல் காந்தியின் டுவிட்டர் கருத்தைக் குறிப்பிட்ட பா.ஜனதா கட்சியின்  எம்.பி.  பூபேந்திரயாதவ் உரிமை மீறல் தீர்மானத்தை மாநிலங்கள் அவையில் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், “அருண் ஜெட்லி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்து உள்நோக்கத்துடன், அவரின் குணத்தையும், நடத்தையையும் தவறாக சித்தரித்து கூறப்பட்டுள்ளது. ஜெட்லிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசியது அந்த அவையையும் அவமானப்படுத்தும் செயலாகும்’’ எனத் தெரிவித்தார்.

சமாதான முயற்சி

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சமாதானம் செய்வதற்காக மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், அருண்ஜெட்லியும் பேச்சு நடத்தினார்.

இந்நிலையில்,  ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸை  மக்களவை சபாநாயகருக்கு வெங்கையா நாயுடு அனுப்பி உள்ளார்.

ஆய்வு செய்தோம்

இது குறித்து மாநிலங்கள் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், “ பா.ஜனதா எம்.பி. யாதவின் உரிமை மீறல் நோட்டீஸை தீவிரமாக ஆய்வுசெய்தோம். அதன்பின் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். நான் ஒவ்வொருவருக்கும் கூறும் அறிவுரை என்னவென்றால், மாநிலங்கள் அவை ஆளும் கட்சித் தலைவர் ஜெட்லி, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்இடையே ஒப்பந்தம் நடந்துவிட்டது.

சரியல்ல

மற்றவர்களும் இதை வரவேற்றுள்ளனர். வெளியில் இருந்து கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக கருத்துக்கள் கூறுவது அவைக்கு சரியல்ல, நமது அரசியல் அமைப்புக்கும் சரிவராது. எப்படி இருப்பினும், உரிமை மீறல் தீர்மானம்  நோட்டீஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மு.க.ஸ்டாலினிடம் உருதுபேசச் சொல்லி கேட்பீர்களா..? காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி ஆத்திரம்..!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!