
நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ? அந்த ஊரின் கலாச்சாரம், பழக்கவழக்கங்களை மதிக்க தெரிந்து இருக்க வேண்டும், வீட்டில் குழந்தைகளை பெற்றோர் தாய்மொழியை பேச கற்றுக்கொடுக்க வேண்டும் என கூறிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் ஆனால் ஆங்கிலேயர்களாக இருக்கக்கூடாது என தெரிவித்தார்.
ஆந்திர வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. விழாவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமை தாங்கினார்.
இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார், அப்பல்லோ மருத்துவக்குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, ஆந்திர வர்த்தக சபையின் தலைவர் இந்திரா தத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு
பெற்ற தாய், பிறந்த இடம், தாய்மொழி, தாய் நாடு இவற்றை யாரும் மறக்க கூடாது என தெரிவித்தார்.
சாதி, மதம் மாறுபட்டு இருந்தாலும் நாம் எல்லாரும் இந்தியர்கள் என குறிப்பிட்ட அவர், நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ? அந்த ஊரின் கலசாரம், பழக்கவழக்கத்தை மதிக்க தெரிந்து இருக்க வேண்டும் என்றார்.
வீட்டில் குழந்தைகளை பெற்றோர் தாய்மொழியை பேச கற்றுக்கொடுக்க வேண்டும், பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்த வெங்கய்யா நாயுடு, நாம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம், ஆனால் ஆங்கிலேயர்களாக இருக்கக்கூடாது என தெரிவித்தார்..