VP தேர்தலில் துரோகம்..! காங்கிரஸின் காட்டுக் கதறல்..! 13 எம்.பி-க்களை துருவித் துருவித் தேடும் இந்தியக் கூட்டணி..!

Published : Sep 10, 2025, 02:11 PM IST
INDIA Alliance floor leaders

சுருக்கம்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களித்ததாக என்.டி.ஏ தலைவர்கள் கூறுகின்றனர்.

துணை ஜனாதிபதி தேர்தலில், எண்டிஏ வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் இந்தியா கூட்டணியின் சுதர்சன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளும் பெற்றனர். இந்திய கூட்டணிக்கு 315 எம்.பி.க்கள் உள்ளனர். சுதர்ஷன் ரெட்டிக்கு, எதிர்பார்த்ததை விட குறைவான வாக்குகளே கிடைத்தன. சில எம்.பி.க்கள் மாற்றி வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இப்படி மாற்றி செய்த எம்.பி.க்கள் மகாவிகாஸ் அகாதி கட்சியைச் சேர்ந்தவர்கள். மாற்றி வாக்களித்ததன் மூலம் என்.டி.ஏ 10 முதல் 13 வாக்குகள் கூடுதலாகப் பெற்றன. இந்த 10 முதல் 13 எம்.பி.க்கள் தமது கூட்டணியின் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்தியா கூட்டணி விசாரித்து வருகிறது.

தேர்தலில் மொத்தம் 752 செல்லுபடியாகும் மற்றும் 15 செல்லாத வாக்குகள் பதிவாகின. துணை ஜனாதிபதி தேர்தலுக்கு 377 வாக்குகள் தேவைப்பட்டன. மாற்றி வாக்களிப்பு குறித்து, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘மாற்றி வாக்களிப்பு பற்றி யார் பேசுகிறார்கள்:? என்டிஏ-வின் சிலர் இதைச் சொல்கிறார்கள். எங்களிடம் இருந்த வாக்குகளின் எண்ணிக்கையின் தரவு எங்களிடம் உள்ளது. எங்களுக்கு 300 வாக்குகள் கிடைத்துள்ளன. 15 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த 15 வாக்குகள் சுதர்சன் ரெட்டியின் முன் எழுதப்பட்டுள்ளன. ஆனாலும், ஏதோ காரணத்தால், அந்த வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன’’ எனக் கூறுகிறார்.

‘‘சிபி ராதாகிருஷ்ணன் எண்ணிக்கையில் வெற்றி பெற்றாலும், உண்மையில் பாஜக தார்மீக, அரசியல் தோல்வியைச் சந்தித்துள்ளது’’ என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறுகிறது. துணை ஜனாதிபதி பதவிக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

சுமார் 40 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் மனசாட்சியைக் கேட்டு, ஏதோ ஒரு வகையில் என்.டி.ஏ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாக பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களித்ததாக என்.டி.ஏ தலைவர்கள் கூறுகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!