தாஜ்மகால் மீது சங்பரிவார் கும்பல் தாக்குதல்…… மேற்கு நுழைவு வாயிலை தகர்த்து எறிந்த விஸ்வ ஹிந்து பரீஷத் அமைப்பினார்…

 
Published : Jun 16, 2018, 10:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
தாஜ்மகால் மீது சங்பரிவார் கும்பல் தாக்குதல்…… மேற்கு நுழைவு வாயிலை தகர்த்து எறிந்த விஸ்வ ஹிந்து பரீஷத் அமைப்பினார்…

சுருக்கம்

VHP persons atttack taj mahal

உலகப்புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமாக விளங்கும் தாஜ்மகால் மீது சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தி மேற்கு நுழைவுவாயிலைத் தகர்த்தனர். சம்மட்டிகள் மற்றும்  கடப்பாரைகளுடன் வந்த விஎச்பி அமைப்பினர் இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிறு…. 25 முதல் 30 பேர் இருக்கலாம். அனைவரும் விஸ்வ ஹிந்து பரீஷத் அமைப்பைச் சேர்ந்த ஆட்கள்.. அவர்கள் அனைவர்  கைகளிலும் கடப்பாறைகளும் இரும்பித் தடிகளும், சம்மட்டிகளும்  இருந்தன.

அவர்கள் திடீரென கூச்சலிட்டபடி கன நேரத்தில் தாஜ் மகாலின் மேற்கு வாசலை இடித்து தள்ளி நாசம் செய்தனர். மேற்கு நுழைவாயில் கதவை இடித்துப் பிடிங்கி 50 மீட்டர் தொலைவில் தூக்கி எறிந்தனர்.

அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் சுதாரிப்பதற்குள் மேற்கு வாயிலை இடித்து தள்ளி அப்புறப்படுத்தினர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் , மேலும் அவர்கள் இடிப்பதற்குள் அவர்களை அப்புறப்படுத்திவிட்டனர்.

இந்து கலாச்சாத்திற்கெதிரான தாஜ்மகாலை இடித்ததில் என்ன தவறு ?  என கேள்வி எழுப்பியுள்ள விஸ்வ ஹிந்து பரீஷத் தலைவர் ரவி துபே , பசாய் கட்டிலுள்ள சித்தேஸ்வர் மகாதேவர் கோவிலுக்கு செல்லும் வழியில் தாஜ்மகாலின் மேற்கு நுழைவுவாயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு செல்லும் வழிக்கு இடையூறாக உள்ளதாகக் கூறினார்.

ஏற்கெனவே, தாஜ்மகாலின் பெயரை ராம் மகால் என்றோ, கிருஷ்ண மகால் என்றோ மாற்ற வேண்டும் என கூறிக்கொண்டு பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்கும் அந்த கும்பலில்  இருந்தார். இது குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!