LIVE: ஆர்.எம்.வீரப்பனின் இறுதி ஊர்வலம் துவங்கியது!

Published : Apr 10, 2024, 04:24 PM ISTUpdated : Apr 10, 2024, 04:34 PM IST
LIVE: ஆர்.எம்.வீரப்பனின் இறுதி ஊர்வலம் துவங்கியது!

சுருக்கம்

மறைந்த முதுபெரும் அரசியல்வாதியும், சினிமா பட தயாரிப்பாளருமான தலைவர் ஆர்.எம்.வீரப்பன் இறுதி ஊர்வலம் துவங்கியது. இதுகுறித்த நேரலை இதோ..  

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் ஆளுமையான, எம்.ஜி.ஆரின் நிழலாக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழக தலைவருமான ஆர்.எம். வீரப்பன் நேற்று தன்னுடைய வயது மூப்பு காரணமாக 98 வயதில் காலமானார். கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட கூடிய உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த இவருக்கு, திடீர் என மிகவும் உடல்நலம் குன்றியதால் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும், திரையுலகை சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. நேற்று முதல், இவருடைய உடலுக்கு பிரபலங்கள் மற்றும் ஏராளனான அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சற்று முன் இவருடைய இறுதி ஊர்வலம் துவங்கியது. இதுகுறித்த நேரலை இதோ... 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்
நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்