நற! நற நாராயணசாமியும், றெக்கை கட்டிய பரபரப்பும்...

 
Published : Jan 20, 2018, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
நற! நற நாராயணசாமியும், றெக்கை கட்டிய பரபரப்பும்...

சுருக்கம்

Very severe scorching is the new Chief Minister Narayanasamy

தன்னை சுற்றி எழுப்பப்படும் பரபரப்பு ஒன்றினால்  மிக கடுமையாக மண்டை காய்ந்து கிடக்கிறாராம் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி.!

அதாவது புதுவை முதல்வர் நாராயண சாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மிக கடுமையான கருத்து மோதல்கள் இருந்தது.

ஆளுநர், மாநிலத்தின் அன்றாட அலுவல்களில் தலையிடக்கூடாது என்று நா.சாவும், எனக்கு மக்கள் பணிகளை கவனிக்க முழு அதிகாரம் இருக்கிறது! என்று கி.பேவும் மாறி மாறி மோதிக் கொண்டார்கள். 

யார் யாரெல்லாமோ சமாதானம் பேசியும் இந்த மோதல் நின்றபாடில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிரண் பேடி மிகவும் கமுக்கமாக இருக்கிறார். நாராயணசாமி டென்ஷனாகும் வகையில் எந்த விஷயங்களும் நடப்பதில்லை. 

இதை மேற்கோள்காட்டித்தான் ‘நாராயணசாமி கட்சி மாற போகிறார், பி.ஜே.பி.யின் இணைய போகிறார்’ என்று பரபரப்புக்கு சிலர் றெக்கை கட்டிவிட்டுள்ளனர்.

அதாவது பி.ஜே.பி.யை சேர்ந்த மத்தியமைச்சர் ஒருவரிடம், தங்களுக்கு இடையிலிருக்கும் பஞ்சாயத்துக்கு தீர்ப்பு தர சொல்லி முறையிட்டாராம் நா.சா. அப்போது அந்த அமைச்சர் ‘நீங்க அருமையான அரசியல்வாதிதான். ஆனா நீங்க இருக்கிற கட்சிதான் தவறானது.’ என்றாராம். அதற்கு, தனக்கும் கவர்னருக்கும் இடையிலிருக்கும் பனிப்போரை நிறுத்தினால் நல்ல முடிவு ஒன்றை தான் எடுப்பேன்! என்று நாராயணசாமி சொன்னாராம். 

இதைத் தொடர்ந்து அந்த அமைச்சர், கிரண்பேடியிடம் கேட்டுக்கொள்ள, அவரும் அமைதியாகிவிட்டாராம். ஆக ஆளுநருடனான  பஞ்சாயத்துகள் வடிந்துவிட்ட நிலையில் நா.சா. பி.ஜே.பி.க்கு மாறும் முடிவை எடுக்கப்போகிறார் என்கிறார்கள். 

ஆனால் நா.சா.வோ இந்த விவகாரத்தை கூறி யாராவது விளக்கம் கேட்டால் நறநறவென பல்லைக்கடிக்கிறார். ‘ஏன் வதந்தியை கிளப்புறாங்க? என்கிற ஆத்திரமா அல்லது இந்த விஷயம் எப்படி வெளியில லீக் ஆச்சு? என்கிற கோபமா! என்பதுதான் புரியவில்லை.

ஆனாலும் சிலர் அடங்காமல் டெல்லியிலிருந்து போன் போட்டு ‘அது உண்மைதானா மிஸ்டர் நாராயணசாமி?’ என்று கேட்கிறார்களாம். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!