உச்சக்கட்ட பதற்றத்தில் பஞ்சாப் ஹரியானா2 பக்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததுதீர்ப்பு வெளியானதையடுத்து ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் மூண்டுள்ளது. பாஞ்சாபில் சாமியாரின் ஆதரவாளருக்கும், போலிசாருக்கும் இடையே வெடித்த இந்த கலவரத்தில் பலரது மண்டைகள் உடைக்கப் பட்டது.பெட்ரோல் பங்கில் தீ வைத்து எரிப்பதும், வாகனங்களை உடைப்பதும் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த கலவரத்தின் காரணமாக இதுவரை 11 பேர் இறந்துள்ளதாகவும், 200 கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்த கலவரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார் .