PM CARE நிதியில் இருந்து வாங்கிய வெண்டிலேட்டர்கள் .. தரம் குறைந்ததா? எம்பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு.!

By T BalamurukanFirst Published Jul 6, 2020, 7:59 AM IST
Highlights

பி.எம் கேர்ஸ்' நிதியத்தின் வாயிலாக தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.இது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. 

'பி.எம் கேர்ஸ்' நிதியத்தின் வாயிலாக தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.இது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. 

  பி.எம் கேர்ஸ் நிதியத்தின் வாயிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்காக 'அக்வா' என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்நிறுவனத்தின் மூலம் வாங்கப்படும் வெண்டிலேட்டர்கள் தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.அந்நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரது கருத்தின்படி , மென்பொருள்கள் மூலம் அந்த வெண்டிலேட்டர்களின் குறைபாடுகள் தெரியாமல் எமாற்றப்படுவதாக செய்திக்கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.அந்த செய்திக்கட்டுரையை இணைத்து ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார்..."பி.எம் கேர்ஸ் நிதியத்தின் திறமைகள் : 1) இந்திய மக்களின் உயிருக்கு ஆபத்து எற்படுத்துவது. 2) மக்களது பணம் தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு பயன்படுவதை உறுதி செய்திருக்கிறது என்றும் அத்துடன் ராகுல் தனது ட்வீட்டில் 'கொரோனாவிற்கு எதிரான போரில் தோற்ற பாஜக” என்ற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்தி இருக்கிறார்..

click me!