’வன்னியர் சமூகத்தில் டாக்டர் ராமதாஸ் யார் யாரை கொன்றார் என்ற பட்டியலை வெளியிடுவேன்’...வேல்முருகன்

Published : Dec 01, 2018, 03:42 PM ISTUpdated : Dec 01, 2018, 03:43 PM IST
’வன்னியர் சமூகத்தில் டாக்டர் ராமதாஸ் யார் யாரை கொன்றார் என்ற பட்டியலை வெளியிடுவேன்’...வேல்முருகன்

சுருக்கம்

சமீபத்தில் மறைந்த பா.ம.க.வின் முக்கிய பிரமுகர் காடுவெட்டியின் மறைவை ஒட்டி எழும் சர்ச்சைகள் நீண்டுகொண்டே போகின்றன. இந்நிலையில் அந்த சர்ச்சைகளை காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் மூலமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தான் தூண்டிவிடுவதாக டாக்டர் ராமதாஸ் தரப்பினர் கூறிவந்தனர்.

இன்று அந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த வேல்முருகன், ‘இனியும் இதுபோன்ற அவதூறான செய்திகளை என் மீது பரப்பினால், பா.ம.க.வையும், டாக்டர் ராமதாஸையும் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன்’ என்று எச்சரித்தார்.

இன்று நடந்த  தனது கட்சியின் கூட்டம் ஒன்றில் பாமக தலைமையை கடுமையாக விமர்சித்த வேல்முருகன்...

"தேவையற்ற அவதூறுகளை என் மீது பரப்பினால், ராமதாஸ் வன்னியர் சமூகத்திற்குள்ளாகவே யார் யாரை கொன்றார். யாரையெல்லாம் மிரட்டி பணம் பறித்தார். எங்கெல்லாம் முறைகேடாக சொத்துக்கள் சேர்த்தார் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் வெளியிட வேண்டியிருக்கும். நான் சாதி அரசியலை கையிலெடுத்தால் ராமதாஸ் அரசியல் அடையாளம் அற்று போகவேண்டியிருக்கும்" என ராமதாஸை காட்டமாக விமர்சித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!